China Tamilil

சீனா ஆசியா கண்டத்தின் கிழக்கில் அமைந்துள்ள ஒரு தீப கற்பம் ஆகும். உலக நிலப்பரப்பில் 1/14 {9597900 சதுர கீ.மீ} பங்கு கொண்ட சீனா வடக்கே மங்கோலியாவையும் வட கிழக்கில் ரஷ்யாவையும் வட கொரியவையும் கிழக்கில் மஞ்சள், கிழக்கு சீன கடல்களையும் தெற்கே வியட்னாமையும் தென் மேற்கே பாகிஸ்தானையும் எல்லையாக கொண்டது. இற்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு மேலான பழைமையான வரலாறு கொண்ட சீனா சிறப்பான பண்பாடு மற்றும் நாகரிகம் கொண்டதாகும்.

சீன நாகரீகமானது தோற்றம் பெறுவதில் அதன் இயற்கை வளம் முக்கிய பங்கு வகித்தது. குறிப்பாக நீர் வளத்தினை கூறலாம். அந்த வகையில் குவாங்கோ நதியானது சீன நாகரீக விருத்தியில் முக்கிய பங்கு வகித்தது. இதன் நீளம் 5464 கி.மீ ஆகும். குவாங்கோ என்ற சீனச்சொல்லின் அர்த்தம் துயரம் என்பதாகும். நீர் வளம் நிறைந்த சீனாவில் கோதுமை, நெல், குரக்கன், கரும்பு, பருத்தி முதலியன உற்பத்தி செய்யப்பட்டன. சீன நதிகள் போக்குவரத்துக்கு ஏற்ற பாதைகளாக நதிகள் காணப்பட்டன.   

சீனரை மஞ்சள் இனத்தினர் என்று அழைப்பர். மங்கொலிய இனத்தவர் சீனருடன் கலந்தமையால் சீனரை சிலர் மங்கோலியராக கருதினர். ஆனால் சீனர் ஒரு தனிக்குளுவினராகவே வாழ்கின்ரனர். சீன மொழி பற்றி நோக்கினால் கி.மு 2697 ல் எழுதத் தொடங்கியிருக்கின்ரனர் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்ரனர். மூங்கிலில் சீனர்கள் எழுதப் பழகினர். கி.மு 105 ல் சீனர் கடதாசி, எழுதுகோல் கொண்டு எழுதத் தொடங்கினர். சீன எழுத்துக்கள் கீழிருந்து மேலாகவும் வலமிருந்து இடமாகவும் எழுதப்பட்டன. கி.பி 100 இல் தம் பதங்களைக் கொண்ட அகராதி ஒன்றை இயற்றினர்.

சீனர்கள் சமய நம்பிக்கை கொண்டிருந்தனர். இவர்கள் பல தெய்வங்களை வணங்கினர் என்று கூற முடியது. அவர்கள் ஆதி காலம் தொட்டு தனிக்கடவுள் உண்டு என்ற கொள்கை கொண்டிருந்தனர். கி.மு 6ம் நூற்றாண்டில் கன்பூசிய மதமும் தேயோ மதமும் பரவின. பின்னர் இவ்விரு மதங்களும் செல்வாக்கு இழந்து பௌத்த மதம் வளர்ச்சி பெற்றது.
சீனாவின் பாரம்பரிய பண்பாடு பற்றி பேசும் போது, ஒருவரைப் பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. அவர் தான் கம்பியூசியஸ். சீன மக்களை பொறுத்தவரையில் கம்பியூசியஸின் செல்வாக்கு முதலிடம் வகிக்கின்றது. கம்பியூசியஸ் சீனாவின் கம்பியூசியஸ் தத்துவத்தை உருவாக்கியவர். உண்மையில் கம்பியூசியஸ் தத்துவம் சீனாவின் பழங்கால தத்துவ இயல் குழுக்களில் ஒன்றாகும். அது ஒரு தத்துவச் சிந்தனையாகும். மதச் சிந்தனை அல்ல. சீனாவின் ஈராயிரத்துக்கும் அதிகமான ஆண்டுகளில் நிலப்பிரபுத்துவ சமூகங்களில் சீராக வளர்ந்துள்ள ஒரு முறையான சிந்தனையாக கருதப்பட்டு நீண்டகாலமாக ஆதிக்கத்தில் இருந்து வருகின்றது. கம்பியூசியஸ் சிந்தனை சீனாவின் பண்பாட்டில் ஆழ்ந்த செல்வாக்கை ஏற்படுத்தியது மட்டுமல்ல, சில ஆசிய நாடுகளிலும் தாக்கத்தை உண்டாக்கியது. இன்று சீனர்கள் கடல் கடந்து அனைத்து நாடுகளிலும் பரந்து வாழ்வதால், கம்பியூசியஸ் சிந்தனையின் செல்வாக்கு சீனாவுக்கு அப்பால் ஆசிய நாடுகளில் பரவியுள்ளது என்று கூறலாம்.

கம்பியூசியஸ் தமது வாழ்நாள் முழுவதும் பெரிய அதிகாரியாக பணி புரியவில்லை. ஆனால் அவர் அறிவுக்கூர்மை மிக்கவர். கம்பியூசியஸ் தனது அரசியல் கருத்தையும் ஒழுக்கச் சிந்தனையையும் பிரச்சாரம் செய்தார்.

அவருடைய தத்துவத்தின் படி, அரசர் நாட்டை சீரான முறையில் நிர்வகிக்க வேண்டும். சாதாரண மக்கள் அரசருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் பல தகுதிகள் இருக்கலாம். ஆனால் வேறுபட்ட நிலையில் தனது தகுதிக்கான மதிப்பு வரம்பை தாண்டக் கூடாது. கம்பியூசியஸின் தத்துவம் துவக்கத்தில் முக்கிய சிந்தனையாக விளங்கவில்லை. கி.மு 2ஆம் நூற்றாண்டில் சீனா மிகவும் வலுவான, ஒன்றிணைந்த, அதிகாரம் மத்திய அரசில் குவிந்திருக்கும் ஒரு நாடாக இருந்தது. கம்பியூசியஸ் தத்துவம், நிலப்பிரபுத்துவ சமூகத்தின் நிதானத்தைப் பேணிக்காப்பதற்கு பொருத்தமானது என்பதை ஆட்சியாளர்கள் கண்டறிந்தனர். எனவே, கம்பியூசியஸ் தத்துவம் நாட்டின் முறையான சிந்தனையாக விதிக்கப்பட்டது.

சீனாவில் பல அரச வம்சங்கள் ஆட்சி செய்தன. அவற்றை நாம் சுருக்கமாக நோக்கினால் முதலில் சியா அரசமரபு கிமு 2100-கிமு 1600 வரையும் சாங் அரசமரபு கிமு 1600- கிமு1046 வரையும்  சவு அரசமரபு கிமு1045- கிமு256  வரையும் , சின் அரசமரபு கிமு 221 -கிமு 206 வரையும் ,ஆன் அரசமரபு கிமு 206 -  220 வரையும் (மேற்கு ஆன்,கிழக்கு ஆன்) அதன் பின்னர் மூன்று இராச்சியங்கள் 220 - 280  வேய்i, சூ & வூ,யின் ஆகியனவும்  யின் அரசமரபு 265- 420வரையும் மேற்கு யின், கிழக்கு யின் என்பன420- 589 வரையும்  சுயி அரசமரபு 581- 618 வரையும்  தாங் அரசமரபு 618- 907 இரண்டாவது சூ 690-705 வரையும் பின்னர் 5 அரசமரபுகள் 907- 960 வரையும் சொங் அரசமரபு 960-1279வரையும்  யுவான் அரசமரபு 1271-1368 வரையும் மிங் அரசமரபு 1368-1644 வரையும் சிங்அரசமரபு1644-1911 வரையும் பின்னர்  சீனக் குடியரசு 1912 ல் ஸ்தாபிக்ககப்பட்டது. சீன மக்கள் குடியரசு 1949ல் சீனக் குடியரசு (தாய்வான்) 1912 ல் ஸ்தாபிக்கப்பட்டது.
சீன குவாங்கோ நாகரீக மக்களின் சாதனைகளை நாம் நோக்குவதன் மூலம் இந்நாகரீகம் பற்றிய அறிவினை வளர்க்கலாம். சீனரின் பட்டு உற்பத்தியானது மிக முக்கியமான சாதனை ஆகும்.சீனாவில் பண்டைய காலத்தில் ஒரு பேரரசின் இராணி (Si Ling-Chi) ஒருவர், அரண்மனைத் தோட்டத்தில் உலவிக் கொண்டு இருக்கையில், அங்கிருந்த முசுக்கொட்டைச் செடியில் இருந்து ஒரு புழு, நல்ல இளம் மஞ்சள் நிறத்தில் ஒரு கூடு ஒன்றைக் கட்டியதைப் பார்த்து இருக்கிறார். அதனைப் பார்த்து ஆச்சரியப்பட்ட அரசி, கூட்டின் இழையப் பற்றி இழுக்க, அது நெடிய தூரம் நீண்டதாம். அதிலிருந்து, ஒரு கூடு ஒன்று ஒரே இழையில் ஆனதையும் தெரிந்து கொண்டு, நிறைய கூடுகளைச் சேர்த்து, பின் அதன் இழைகளைக் கொண்டு ஒரு சிறு ஆடை தயாரித்துப் பார்த்து, அதன் அழகில் மயங்கி, இப்படியாகத் துவங்கியதுதான் பட்டு நூலாடைகள். மேலும் இந்த வகை ஆடைகள் இராச குடும்பத்தில், அதுவும் சீனாவில் மட்டுமே இரகசியமாக வைக்கப்பட்டதாம்.

இப்படியாக சுமார் 2500 ஆண்டுகள் கழிந்துவிட, ரோமானிய மன்னன் எதேச்சையாக சீன இளவரசியைத் திருமணம் செய்ய முதல் முறையாக பட்டுக் கூடும், புழுவும் எல்லை தாண்டியது. எனினும் அவர்கள் அதனை வளர்க்கத் தெரிந்து இருக்கவில்லை. மீண்டும் பாதிரியார் ஒருவரைச் சீனாவுக்கு அனுப்பி அவர் மூலமாகத் தெரிந்து கொள்ள முறபட்டும், முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. இப்படியாக, சீனாவின் பட்டு நூலாட்சி கொடி கட்டிப் பறந்தது.

இந்தச் சூழலில் ஜப்பானியர்கள் வெகு சாமர்த்தியமாகபட்டு நூல் வளர்க்கத் தெரிந்தநான்கு சீனப் பெண்மணிகளைக் கடத்திச் சென்று அல்லது பணிப் பெண் வேலைக்கென அழைத்துச் சென்று, பின் திருமணம் செய்து கொண்டார்கள். அதன் பின் ஜப்பானியர்கள் அவர்கள் மூலமாகபட்டு நூல் வளர்ப்பைத் துவக்கி, அதன் உற்பத்தியில் மேம்பாடு கண்டு சீனாவின் உற்பத்தியை விடப்பன்மடங்கு உற்பத்தி செய்யஆரம்பித்து விட்டார்களாம். ஆனால், சீனர்களுக்கு அபிவிருத்தி செய்யத் தெரிந்து இருக்கவில்லையாம்.அதன் பின்னர் ஜப்பான் பட்டு நெசவு, வளர்ப்புக்கான காப்புரிமையை மேலை நாடுகளுக்கு தர முன் வந்ததும், இந்தியாவும் சீனாவின் இரகசியத்தைத் தெரிந்து கொண்டதும் உலகளாவிய பட்டு நெசவுக்கு வழி வகுத்தது.

சுமார் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் சீனாவில் திறந்துவைக்கப்பட்ட பண்டை கால வர்த்தகப் பாதையான பட்டுப்பாதை உலகப் புகழ்பெற்றது. சீனாவையும் ஐரோப்பிய, ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளையும் இணைக்கும் இப்பட்டுப்பாதை, கீழை மற்றும் மேலை நாடுகளுகளின் பொருள் பரிமாற்றத்துக்கும் நாகரிகத் தொடர்புக்கும் முக்கிய பங்காற்றியுள்ளது.

இது ஆசியாவின் தென்பகுதியூடாகத் தொடரான பல பாதைகள் இணைந்து அமைந்தது. பட்டுப் பாதை இன்று சியான் (Xi'an) எனப்படுகின்ற சீனாவின் சாங்கான் (Chang'an) பகுதியை சின்ன ஆசியாவின் அன்டியோச்சுடன் இணைத்தது. இது 6500 கிலோ மீட்டருக்கு மேல் நீளமானது. இதன் செல்வாக்கு ஜப்பான், கொரியா ஆகிய நாடுகள் வரை பரவியிருந்தது.
பட்டுப் பாதையின் மூலம் நடைபெற்ற பரிமாற்றங்கள் சீனா, பண்டைய எகிப்து, மெசப்பத்தேமியா, பாரசீகம், இந்தியா, ரோம் ஆகிய இடங்களில் நிலவிய நாகரிகங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது மட்டுமன்றி நவீன உலகத்தை உருவாக்குவதற்கும் அடிப்படையாக அமைந்தது எனலாம்.

வடக்குச் சீனாவின் வணிக மையங்களுக்கு அப்பால் பட்டுப் பாதை, வடக்கிலும் தெற்கிலுமாக இரு கூறாகப் பிரிந்து செல்கின்றது. பண்டை காலத்தில் சீனாவிலிருந்து மத்திய ஆசியா வழியாக தெற்காசியா, மேற்காசியா, ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா ஆகியவற்றுக்குச் செல்லும் தரை வழி வணிகப் பாதையாகப் பட்டுப் பாதை திகழ்ந்தது. சீனாவின் ஏராளமான இயற்கைப் பட்டு நூல்களும் பட்டுத் துணிகளும் இப்பாதை வழியாக மேலை நாடுகளுக்கு அனுப்பப்பட்டன. இதனால் பட்டுப்பாதை என்று அழைக்கப்பட்டது. கி.மு முதலாவது நூற்றாண்டில் சீனாவின் ஹென் வமிசக் காலத்தில் இப்பட்டுப்பாதை உருவாகியது என்று தொல்லியல் ஆய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

கி.மு.2வது நூற்றாண்டு முதல் கி.பி. 2வது நூற்றாண்டு வரை பட்டுப் பாதை நெடுகிலும்  மேற்கிலிருந்து கிழக்கு வரை 4 பேரரசுகள் இருந்தன. அவை, ஐரோப்பாவின் ரோம், மேற்காசியாவின் Parthiaபண்டை கால அடிமை முறையுடைய நாடான ஈரான், மத்திய ஆசியாவின் குஷான், Kushan( மத்திய ஆசியாவிலும் இந்தியாவின் வட பகுதியிலும் ஆதிக்கம் செலுத்திய பேரரசு), கிழக்காசியாவைச் சேர்ந்த சீனாவின் ஹென் வம்ச பேரரசு என்பனவாகும். பட்டுப்பாதையினால், இந்தப் பண்டை கால நாகரிகங்களுடன் நேரடித் தொடர்பு ஏற்பட்டு, அதன் தாக்கம் பரவியது. அதன் பின்னர் எந்த நாகரிகமும் தனித்து வளரவில்லை.

சீனாவின் பொருட்களும் தொழில் நுட்பமும் பட்டுப் பாதை வழியாக உலகின் பல்வேறு இடங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டன. எடுத்துக்காட்டாக, பட்டுத் துணி, பட்டுப்புழு, காகித உற்பத்தி மற்றும் அச்சு நுட்பம், அரக்கு (lacquer), மட்பாண்டம், வெடி மருந்து, திசையறி கருவி முதலிய சீனப் பொருட்கள் உலகின் நாகரிகத்துக்கு முக்கிய பங்கு ஆற்றியுள்ளன.

பட்டுப் பாதையினால், பொருள் வர்த்தகத்தோடு, பண்பாட்டுத் தொடர்பும் விறுவிறுப்பாக நடைபெற்றது. உலகின் 3 முக்கிய மதங்களில் ஒன்றான பௌத்த மதம், கி.மு. 206ஆம் முதல் கி.மு. 220ஆம் ஆண்டின் இறுதி வரை, சீனாவில் நுழைந்தது. 3வது நூற்றாண்டில் செதுக்கப்பட்ட, சிங்ஜியாங்கின் கச்சிழ் கற்குகைக் கோயிலில் இதுவரை பாதுகாக்கப்பட்டுவரும் சுமார் 10 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவுடைய சுவர் ஓவியம், முற்காலத்தில் இந்தியாவிலிருந்து சீனாவுக்குள் புத்த மதம் பரவிய அடையாளத்தைப் பிரதிபலிக்கின்றது. பௌத்த மதம் இந்தியாவிலிருந்து பட்டுப் பாதை வழியாகச் சீனாவின் சிங்ஜியாங் கச்சிழில் நுழைந்து.

9வது நூற்றாண்டுக்குப் பின், ஐரோப்பிய மற்றும் ஆசியக் கண்டங்களில் ஏற்பட்ட அரசியல்-பொருளாதார மாற்றங்களினால், கடல் போக்குவரத்து வளர்ச்சி பெற்று, வர்த்தகத்தில் கடல் போக்குவரத்து முக்கிய இடம் வகித்தது. பாரம்பரிய சிறப்பு மிக்க இந்தப் பண்டைக் காலத் தரை வழி வணிகப் பாதை படிப்படியாக வீழ்ச்சியடைந்தது. 10வது நூற்றாண்டின் சொங் வம்ச காலத்தில் பட்டுப் பாதையின் பயன்ப்பாடு மிகவும் குறைவாக இருந்தது.
மட்பாண்டங்கள் பீங்கான்கள் தயாரிப்பில் சீன குவாங்கோ மக்கள் பிரசித்தி பெற்று விளங்கினர். இவர்கள் தமது தேவைகளுக்காகவும் ஏற்றுமதிக்காகவும் இவற்றை தயாரித்தனர். ஏனைய நாடுகளுடன் வர்த்தகத்தின் போது பீங்கான்களும் மட்பாண்டங்களும் முதன்மை பெற்றுக் காணப்பட்டன. இதில் சிறப்பம்சம் என்னவென்ரால் இவற்றில் நிறம் தீட்டப்பட்டு காணப்பட்டன. மேலும் இவை சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருந்தன. சாங்க் ஆளுன்குடியினர் காலத்தில் தான் தேநீரானது ஒரு சமய வழக்கம் எனும் நிலை பெற்றது. மிகவும், வழமை மீறிய, நேர்த்தியான அழகிய பீங்கான் தேனீர் கிண்ணங்களில் தேனீர் அருந்துவது அவர்களது பெருமைகளில் ஒன்றாக கருதப்பட்டது. இது சீன நாகரீகத்தவரின் உன்னத சாதனை ஆகும்.
சீன நாகரீகத்தவரின் குறிப்பிடத்தக்க சாதனையாக அமைவது வெண்கல உற்பத்தியும் அதன் பாவனையுமாகும். வெண்கல உற்பத்திகள் சீன மக்களிடையே பிரபலமாகக் காணப்பட்டது. வெண்கலப்பாத்திரங்கள் அதிகளவில் சடங்குகளிற்காகவே பயன்படுத்தப்பட்டது.
சீனர் மத்தியில் மறுபிறப்பு பற்றிய நம்பிக்கை காணப்பட்டது. இதனால் இறந்து போனவர்களுக்கு மரணச்சடங்கு செய்தனர். இந்த மரணச் சடங்கின் போது பல்வேறு உணவு வகைகளும் குடிபானங்களும் இவர்களிற்கு தேவைப்பட்டது. அத்துடன் அவற்றை இவர்கள் வெண்கலத்தாலான பாதிரங்களிலேயே இட்டு வைத்தனர். ஒரு மரணச் சடங்கின் போது 200 க்கு மேற்பட்ட பாத்திரங்கள் தேவைப்பட்டன. இப்பாத்திரங்கள் சடங்குகள்ன் பின்னர் சில வேளைகளில் கல்லறைகளில் புதைக்கப்பட்டன.

சீனரின் வெண்கலக் கைத்தொழில் திட்டமிட்ட வகையில் நுட்பமான முறைகளை உடையதாக காணப்பட்டது. வெண்கலச் சுரங்கங்களை குடைதல், சுத்திகரித்தல்,கொண்டு செல்லுதல், பாத்திரங்களையும் பொருட்களையும் உட்பத்தி செய்தல் எனும் படி முறைகள் காண்ப்பட்டது.

சீனரின் வெண்கல பாத்திரங்கள் பல  கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதனை கொண்டு பார்க்கும் போது சீனர் வெண்கல உட்பத்தியில் உன்னத தேர்ச்சி பெற்றிருந்தனர் என்று தெரிகிறது.
சீன மொழி உலகின் பயன்பாட்டுத் துறையில் மிக நீண்டகாலம் உடையது. அதன் விபரங்கள் செழுமையானது. எண்ணிக்கையும் மிக அதிகமானது. அதன் உருவாக்கமும் பயன்பாடும் சீனத் தேசத்தின் பண்பாட்டு வளர்ச்சியை வளர்ந்துள்ள மட்டுமல்ல. உலகின் பண்பாட்டு வளர்ச்சிக்கும் ஆழந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.     
சுமார் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய பைன்போ சிதிலம் உள்ளிட்ட இடங்களில் சீன மொழி எழுத்து வடிவம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் வகைகள் அப்போதுதான் 50க்கும் மேலாக அடைந்தன. எழுத்துக்கள் வரிசையில் ஆனவை. அத்துடன் குறிப்பிட்ட முறையில் ஒழுங்கானவை. எளிதான எழுத்தின் தனிச்சிறப்பியல்பும் அதற்கு உண்டாகியுள்ளது. இவை சீன மொழி எழுத்துக்களின் அடிப்படையாகும் என்று அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

சீன மொழி எழுத்துக்கள் கி.மு.16ம் நூற்றாண்டின் சான் வம்சகாலத்தில் தொகுதியான எழுத்துக்களாக உருவாகின. சான் வம்சகாலத்தின் துவக்கத்தில் சீனாவின் நாகரிகம் மிக உயர்ந்த நிலையில் வளர்ந்தது. குருத்து மொழி தோன்றுவது அதன் தனிச்சிறப்பியல்புகளில் ஒன்றாகும். இந்த எழுத்துக்கள் ஆமை ஓட்டிலும் விலங்குகளின் எலும்பிலும் செதுக்கப்பட்ட பழைய எழுத்துக்களாகும். சான் வம்சகாலத்தில் மன்னர்கள் எந்த ஒரு செயலையும் செய்யத் தொடங்குவதற்கு முன் ஆரூடம் கணித்தனர். அதற்காக விலங்கு எலும்பு அதற்காக பயன்படுத்தப்பட்டதுவிலங்கு எலும்பை பயன்படுத்துவதற்கு முன் பதனீடு செய்ய வேண்டும். முதலில் அதில் உள்ள ரத்தமும் இறைச்சியும் நீக்கப்பட வேண்டும். சமப்படுத்தப்பட வேண்டும். கணியன்களின் பெயர் அதில் செதுக்கப்பட வேண்டும்.

சீன மொழி எழுத்துக்கள் சித்திரங்களைப் போன்றவை. ஒலிப்பையும் வடிவத்தையும் மையமாகக் கொண்ட எழுத்து அமைப்பு முறையுடன் மொத்தம் பத்தாயிரம் எழுத்துக்களைக் கொண்டுள்ளது. இவற்றில் அடிக்கடி பயன்படுத்தப்படும் எழுத்துக்கள் மூவாயிரமாகும். இந்த மூவாயிரம் எழுத்துக்களால் எல்லையற்ற சொற்களை உருவாக்கலாம். பல்வகை வசனங்களை உருவாக்க முடியும்.

சீன மொழி எழுத்துக்கள் உருவான பின் அண்டை நாடுகளில் அவை ஆழ்ந்த செல்வாக்கை ஏற்படுத்தின. ஜப்பான், வியட்நாம், வட கொரியா உள்ளிட்ட நாடுகளின் எழுத்துக்கள் சீன மொழி எழுத்துக்களின் அடிப்படையில் உருவானவை. இதன் மூலம் சீனர் எழுத்துக்கலையில் ஏற்படுத்திய சாதனையினை மதிப்பிட முடிகிறது.

காகித உட்பத்தி சீனரின் முக்கிய சாதனைகளில் ஒன்றாகும். காகிதத்தைக் கண்டுபிடித்தவர் சாய் லுன் ஆவார்.இவருடைய பெயரை அறிந்தவர்கள் மிகக் குறைவே. காகிதத்தின் முக்கியத்துவத்தைக் கவனத்திற் கொள்ளும் போது, சாய் லுன் பற்றிய குறிப்புகள் இல்லாமையால்அவருடைய பெயரை ஒரு கற்பனைப் பெயர் தானோ என்ற ஐயம் எழலாம். எனினும் கவனமான ஆராய்ச்சிகளிலிருந்து சாய் லுன் என்பவர் உண்மையான ஆள் தான் என்பதும் அவர் சீனப் பேரரசரின் அரசவையின் ஓர் அதிகாரியாகப் பணிபுரிந்தார் என்பதும் அவர் தாம் தயாரித்த காகிதத்தின் மாதிரிகளை பேரரசர் ஹோ-டியினிடம் கி.பி. 105 ஆம் ஆண்டளவில் அளித்தார் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. ஹான் அரச மரபின் அகராதி முறை வரலாற்றில் சாய் லுன் கண்டுபிடிப்பு பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. இந்தச் செய்தி நம்பக் கூடியதாகவே உள்ளது. இதில் மந்திர தந்திரச் செயல்களோ புராண அற்புதங்களோ எதுவுமில்லை. காகிதத்தைக் கண்டு பிடித்தவர் சாய் லுன் தான் என்றே சீன வரலாறு திட்ட வட்டமாகக் கூறுகிறது. இச்சாதனைக்காகச் சீனாவில் அவர் பெரிதும் போற்றப்பட்டார்.

எனினும், சாய் லுன் வாழ்க்கை குறித்து அதிகமான விவரங்கள் கிடைக்கவில்லை. அவர் ஓர் அலியாக இருந்தார் என சீனத்துச் சான்றுகள் கூறுகின்றன. சாய் லுன்னின் கண்டுபிடிப்பு குறித்துச் சீனப் பேரரசர் பெரும் மகிழ்ச்சி கொண்டார் என்றும் ஆவணச் சான்றுகள் குறிக்கின்றன. இந்தக் கண்டுபிடிப்புக்கே, சாய் லுன்னுக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. அவர் பணக்காரராகவும் ஆனார். ஆனால், பின்னர் அவர் அரண்மனைச் சூழ்ச்சி யொன்றில் சிக்கிக் கொண்டார். அதன் விளைவாக அவருடைய செல்வாக்கு வீழ்ச்சியடைந்தது. அவதிக்குள்ளாகிய சாய் லுன், நீராடி அலங்கார ஆடைகள் அணிந்து, நஞ்சுண்டு மாண்டார் எனச் சீனச் சான்றுகள் கூறுகின்றன.

சீனாவில் இரண்டாம் நூற்றாண்டின் போது காகிதம் பெருமளவுக்குப் பயனுக்கு வந்தது. அடுத்த சில நூற்றாண்டுகளில் சீனாவிலிருந்து மற்ற ஆசிய நாடுகளுக்கு காகிதம் ஏற்றுமதி செய்யப்பட்டது. காகிதம் தயாரிக்கும் உத்தியைச் சீனர்கள் நீண்ட காலம் இரகசியமாகவே வைத்திருந்தார்கள். ஆனால் கி.பி. 751 இல் சீனக் காகிதத் தயாரிப்பாளர்கள் சிலரை அராபியர்கள் பிடித்துச் சென்றனர். அதன் பின் சில ஆண்டுகளிலேயே சமர்கண்டிலும், பாக்தாதிலும் காகிதம் தயாரிக்கப்படலாயிற்று, காகிதம் தயாரிக்கும் கலை படிப்படியாக அரபு உலகம் முழுவதிலும் பரவியது. ஐரோப்பியர்கள் 12 ஆம் நூற்றாண்டில் இந்தக் கலையை அராபியர்களிடமிருந்து கற்றுக் கொண்டனர். காகிதத்தில் பயன்பாடு உலகெங்கும் படிப்படியாகப் பரவியது.

இன்று நூல்களும் மற்ற எழுத்துச் சுவடிகளும் மலிவாகவும் மிகப் பெருமளவிலும் தயாரிக்கப் படுகின்றன என்றால் அதற்குக் காகிதம் பயனுக்கு வந்ததே தலையாய காரணமாகும். அச்சு எந்திரம் கண்டுபிடிக்கப் படாதிருந்தால் காகிதத்திற்கு இன்றுள்ள அளவுக்கு பெரும் முக்கியத்துவம் ஏற்பட்டிருக்காது என்பது உண்மைதான். ஆயினும் அச்சடிப்பதற்கு காகிதம் போன்ற மலிவான எழுது பொருள் பெருமளவில் கிடைக்காது போயிருப்பின் அச்சு எந்திரத்திற்கு முக்கியத்துவம் ஏற்பட்டிருக்காது என்ற உண்மையையும் ஒப்புக் கொள்ள வேண்டும்.

வேளாண்மையும் எழுத்து முறையும் சீனாவை விட மத்திய கிழக்கில் முன்னதாகவே முன்னேற்றம் அடைந்தது உண்மைதான். ஆனால் மேலை நாட்டு நாகரிகத்தை விடச் சீன நாகரிகம் பின் தங்கியதற்கு இதை மட்டும் காரணமாகக் கூற முடியாது. இதற்கு முக்கிய காரணம் சாய்லுன்னுக்கு முன்பு வரை சீனாவில் வசதியான எழுது பொருள் எதுவும் இல்லாமலிருந்தது தான் என நான் கருதுகிறேன். மேலை நாடுகளில், "பப்ரைஸ்" என்ற எழுது பொருளில் குறைபாடுகள் இருந்த போதிலும் பப்ரைஸ் நூல்கள் மரத்தினால் அல்லது மூங்கிலால் ஆக்கப்பட்ட நூல்களை விட மிகவும் உயர்தரமாக இருந்தன. பொருத்தமான எழுது பொருள் இல்லாதிருந்தது சீனப் பண்பாட்டு முன்னேற்றத்திற்குப் பெருந் தடங்கலாக அமைந்தது.

பொருத்தமான எழுது பொருள் கிடைத்து விட்டமையால் சீன நாகரிகம் மிகத் துரிதமாக முன்னேறியது. அடுத்து வந்த நூற்றாண்டுகளில் மேலை நாடுகளில் முன்னேற்றம் மிகவும் மந்தமடைந்திருந்த அதே சமயத்தில் சீனாவில் திசைகாட்டி, துப்பாக்கி மருந்து, அச்சுப்பாள அச்சு முறை ஆகியவை கண்டு பிடிக்கப் பட்டன. ஆட்டுத் தோலைவிடக் காகிதம் மலிவாக இருந்தமையாலும, அது பெருமளவில் கிடைத்தமையாலும், மேலை நாடுகளை விடச் சீனா விரைவாக வளர்ச்சியடைந்தது.

1000 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் ஐரோப்பியர்கள் காகிதம் தயாரிக்கலானார்கள். சீனர்கள் காகிதம் தயாரிப்பதைப் பார்த்த பின்புங்கூட மற்ற ஆசிய மக்கள் தாங்களே காகிதம் தயாரிக்கும் முறையைக் கண்டு பிடிக்கவில்லை. காகிதம் தயாரிப்பதற்கு அவர் கையாண்ட அதே முறையின் அடிப்படையில் தான் (1800களில் எந்திரமுறை புகுத்தப்பட்ட பின்னரும்) மாற்றமின்றி இன்றும் கையாளப்படுகிறது.
மனித குலத்தின் போர் வரலாற்றில் புரட்சித் தன்மையுடைய இது கவராயம், தாள் தயாரிப்புத் தொழில்நுட்பம் மற்றும் அச்சுத் தொழில்நுட்பத்துடன் இணைந்து சீனாவின் மிகப் பெரிய நான்கு கண்டுபிடிப்புகள் என அழைக்கப்பட்டது. அதில் சிறப்பான சீன மக்களின் சாதனையாக விளங்குவது சீனரால் கண்டுபிடிக்கப்பட்ட வெடிமருந்து ஆகும். வெடிமருந்தினை கண்டுபிடித்தவர் ஃபி ஷிங் ஆவார். கண்டுபிடிக்கப்பட்ட காலம் 1041 முதல் 1048ஆம் ஆண்டு வரை ஆகும்.
கந்தகம், மனோசிலை, வெடியுப்பு, தேன் ஆகியவற்றைக் கலந்து வெடிப்பது பதிவு செய்யப்பட்ட வெடி மருந்தின் முதல் சூத்திரமாகும். இதனை அடியொற்றியே பிற்காலங்களில் பாரிய அளவில் வெடிமருந்து உற்பத்தி செய்யப்பட்டது. அத்துடன் சீனாவிலிருந்தே ஏனைய நாடுகளுக்கு வெடிமருந்தின் தாற்பரியம் உணரப்பட்டது. ஏறக்குறைய 13ஆம் நூற்றாண்டின் போது, வெடிமருந்து சீனாவிலிருந்து இந்தியா மூலம், அரபு நாட்டு மக்களுக்குப் பரவியது. இதற்குப் பின், அவர்களால் ஸ்பெயின் கடந்து ஐரோப்பாவுக்குக் கொண்டு செல்லப்பட்டது என்பதில் ஐயமில்லை. உலகில் புகழ் பெற்ற சிந்தனையாளரும், புரட்சியாளருமான பேலித்லிச்•வோன்• அன்னன்குஸ் சீனாவின் வெடிமருந்து கண்டுபிடிப்பை மதிப்பிட்டுள்ளர். இதன் அடிப்படையில் பார்த்தால் சீனரின் முக்கியமான அருஞ்சாதனையாக வெடி மருந்து கண்டு பிடிப்பினைக் கூறலாம்.
அச்சுத் தொழில்நுட்பம் சீனாவின் மிகப் பெரிய 4 கண்டுபிடிப்புகளில் ஒன்று. அச்சுத் தொழில்நுட்பம் இரண்டு வளர்ச்சிப் போக்குகளைச் கொண்டிருந்தது. முதலில் மரப் பலகையில் செதுக்கும் அச்சுத் தொழில்நுட்பம். இரண்டு தனி எழுத்து அச்சுத் தொழில்நுட்பம் சுமார் 7ஆம் நூற்றாண்டு உலகில் முதன்முதலாக மரப் பலகையில் எழுத்துக்களைச் செதுக்கி பிரதி எடுக்கும் அச்சுத் தொழில்நுட்பம் சீனத் தாங் வம்சக் காலத்தில் தோன்றியது.
1041 முதல் 1048ஆம் ஆண்டு வரை பி ஷிங் ஒட்டும் பண்புடைய மண்ணால் எழுத்துகளை வடிவமைத்தார்அதற்குப் பின் அவர் அந்த வடிவுகளுக்கேற்ப தனி எழுத்துகளை உருவாக்கினார்.அவர் கண்டுபிடித்த தனித்தனி எழுத்துக்களாலான அச்சுத் தொழில்நுட்பம் மனித குலத்தின் அச்சுக்கலை வரலாற்றில் மிக முக்கிய மாற்றம் ஆகும். உண்மையில் இது புத்தர்களால் எட்டாம் நூற்றாண்டில் சமயம் தொடர்பான கருத்துகளையும் படங்களையும் பரப்ப அச்சடிப்பு கண்டுபிடிக்கப்பட்டது என்றும் கருத்துக்கள் காணப்படுகிறது.  ஆனால் சாங் ஆளுங்குடியினரின் அரசுத்துறை கன்ஃபூசியஸ் உரைகளை பதிப்பிக்க அச்சுத்துறைக்கு ஆதரவு நல்கியது. அரசுத்துறைக்கு  தேர்வுகளுக்காக மாணாக்கர்கள் கற்க இவை தேவைப்பட்டன. இந்த தேர்வில் வென்றால் அரசு அதிகாரிகளாக தகுதி பெறலாம். எனவே, இக்கால கட்டத்தில் கன்ஃபூசியசின் உரைகள் பல படிகள் அச்சடிக்கப்பட்டன. அதுவுமன்றி, உழவு மற்றும் மருத்துவம் போன்ற தொழில்நுணுக்க கையேடுகளை பரவலாக்க அரசுஅச்சுத்துறையை அறிமுகம் செய்தது.
இந்த அச்சு தொழில் நுணுக்கத்தால் கல்வியறிவு மற்றும் இலக்கிய வளர்ச்சியில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை சொல்லவும் வேண்டுமா சீன மொழியின் தன்மையால்  அச்சுத்தொழிலின் தாக்கம் சீனத்துக்கும் மேற்குக்கும் வேறாக இருந்தது.   சீன மொழி பட எழுத்துருக்களை பயன்படுத்துகிறது.

1249 என தேதி இடப்பட்ட மரப்பலகை கொண்டு அச்சிடப்பட்ட பென் டாவோ (Pen ts’ao), மூலிகை மருத்துவம் தொடர்பான நூலின் ஒரு பக்கம் சீனர்களின் பண்பாட்டு கோட்பாடுகளை மட்டுமன்றி சீன அரசின் முக்கிய ஆவணங்களையும் வழங்கிட அச்சுத்துறை இயன்றது.

11ஆம் நூற்றாண்டில் ச்சென் குவா (Shen Gua) எனும் புகழ்பெற்ற எழுத்தாளர் பை செங் (Bi Sheng) என்ற பெயர் கொண்ட ஒருவர் நகரும் அச்சுகளைக்கொண்டு அச்சிடும் கண்டுபிடிப்பு செய்தது பற்றி பதிவு செய்துள்ளார்.  இந்த படைப்பே இறுதியில் மேற்கு உலகம் தம் கையில் எடுத்துக்கொள்ள குட்டன்பர்க் என்பவரால் பைபிளை அச்சடிக்க பயன்படுத்தப்பட்டது.

சீனத் தனி எழுத்துகளின் அச்சுத் தொழில்நுட்பம் 14ஆம் நூற்றாண்டு கொரியாவிலும் ஜப்பானிலும் பரவியது.இத்தொழில்நுட்பம் சிங்கியாங்கிலிருந்து பெர்சியா மற்றும் எகிப்தின் மூலம், ஐரோப்பிய நாடுகளில் பரவல் செய்யப்பட்டது. சுமார் 1450ஆம் ஆண்டுக்கு முன்னரும், பின்னரும், ஜெர்மனின் குட்டன்பேர்க் மக்கள் சீனாவின் அனுபவத்தைப் பயன்படுத்தி, பின்யின் எழுத்துகளை உலோகத்தில் உருவாக்கினர். இந்த வகையில் சீனாவின் அச்சுத் தொழில்நுட்பம் நவீனச் சமூகம் உருவாவதற்கு வாய்ப்பை வழங்கியது.
பண்டைய சீன சிங் வம்சத்திற்கு (கி.மு 1644-1911) முன் சீனாவில் கண்ணாடி உற்பத்தி செய்யப்பட்டது. எனினும் சீனாவில் கண்ணாடி தயாரிப்பில் முந்தைய தொல்பொருள் ஆதாரம் பின்னர் வந்த சவ் அரசகுலத்திலிருந்து (கி.மு1046 221BC) வருகிறது. மட்பாண்டப்பொருள்கள் மற்றும் உலோக வேலைப்பாடுகளை ஒப்பிடும் போது சீன வரலாற்றில் கண்ணாடி கலை மற்றும் கைவினை ஒரு பெரும் பங்கை பெற்றுள்ளது. கண்ணாடிப் பொருட்களின் பயன்பாடு பற்றிய தொல்பொருள் சான்றுகள் சீனாவில் கிடைத்துள்ளன. இலக்கிய ஆதாரங்களின் படி கி.பி. 5 ஆம் நூற்றாண்டிலிருந்து கண்ணாடி உற்பத்தி இன்றுவரை காணப்படுகிறது.சீன ஒப்பிடக்கூடியதாக பின்னர் மொசபத்தேமியர் மற்றும் எகிப்தியர்கள் விட கண்ணாடி உற்பத்தி கற்று சிறப்பான முறையில் உற்பத்தி செய்தனர்.

ஹான் வம்ச காலத்தில் (206 கிமு 220 AD) கண்ணாடி பல்வேறு பயன்பாட்டிற்கு உபயோகப் படுத்தப்பட்டது.குறிப்பாக  கண்ணாடி சடங்கு பொருளாக பயன்பட்டது.உற்பத்தி போரிடும் அரசுகளின் கால சீன கண்ணாடி பொருட்கள் ஊக்கம் மற்றும் ஹான் வம்சம் இறக்குமதி கண்ணாடி பொருட்களின் ரசாயன கலவை மாறுபட்டிருக்கின்றன.
போரிடும் அரசுகளின் காலம் மற்றும் ஹான் வம்சம் இடையே காலம் ஆரம்பத்தில் சீன கண்ணாடித் தொழில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கால கண்ணாடி பொருட்களை மிகவும் கோபுரங்களின் அகழ்வாராய்ச்சிகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஹான் திபெத் மங்கோலியா உள்ளிட வெவ்வேறு சீன இனக்குழுக்கள் பயன்படுத்தும் எல்லா மருந்துகளுக்கும் சீன மருத்துவம் என்று பொதுவான பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த இனக்குழுக்களிடையே ஹான் இனம் பயன்படுத்தும் மருந்துதான் சீனாவிலும் உலகம் முழுவதிலும் பெரும் செல்வாக்கு பெற்றுள்ளது. ஹான் இனம் தான் முதன் முதலில் தனக்கென ஒரு மருத்துவ முறையை உருவாக்கியது. 19ம் நூற்றாண்டில் மேற்கத்திய மருத்தும் பிரபலமடைந்தது போல ஹான் மருத்துவம் கீழை நாடுகளில் பிரபலமானது.
சீனாவின் தேசிய இனங்கள் உருவாக்கிய பல்வேறு மருத்துவ முறைகளில் ஹான் இனம் உருவாக்கிய மருத்துவ முறைதான் மிகவும் பழமையானது. நடைமுறைப் பயன்பாட்டிலும் கோட்பாட்டு அறிவிலும் வளம் மிக்கது. மஞ்சள் ஆற்றுவளநிலப் பகுதியில் உருவெடுத்த சீன மருத்தும் வெகுகாலத்துக்கு முன்பே ஒரு அறிவியல் புலமாக நிலைநிறுத்தப்பட்டது. அது வளர வளர நல்ல பல மருத்துவர்களும் கோட்பாடுகளும் முன்னேற்றங்களுக்கு உருவெடுத்தன.
3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஷாங் வம்சத்தில் இருந்த செல்வாக்கு எலும்பு,கல்வெட்டுக்களிலேயே மருத்துவ சிகிச்சை, தூய்மை, நோய் போன்ற தகவல்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வந்த ச்சோ வம்சத்தில் நோய்க் கூறு கண்டறியும் பல்வேறு நுட்பங்களை மருத்துவர்கள் கற்றுக் கொண்டனர். இந்த நுட்பங்கள் நான்கு பெரும் முறைகளாக இப்போது பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் கூர்ந்து கவனித்தல், கேட்டல், மற்றும் முகர்ந்து பார்த்தல், விசாரித்த்ல், நாடித்துடிப்புமு இதயத்துடிப்பும் அறிதல் ஆகியன அடங்கும். நோய்களைக் குணப்படுத்துவதற்காக மருந்துகள், அக்குபங்ச்சர், அறுவை சிகிச்சை போன்ற பல மருத்துவ முறைகளை மருத்துவர்கள் பயன்படுத்தினார்கள். சின் மற்றும் ஹான் வம்ச காலத்தில்கி.மு.221-கி.மு.220மஞ்சள் போரரசரின் மருத்துவ சாத்திரம் அல்லது ஹாவாங் தி நிய் ஜிங் என்ற புதிய புத்தகம் எழுதப்பட்டது. அதில் சீன மருத்துவக் கோட்பாடுகள் முறைப்படி விவாதிக்கப்பட்டுள்ளன. தற்போது கிடைக்கும் மிகவும் பழமையான நூல் இதுவாகும். மற்றொரு புத்தகம், மூன்றாம் நூற்றாண்டில் ச்சாங் சோங்ஜின் என்பவர் எழுதிய பெஃப்ரில் மற்றும் இதர நோய்கள் என்ற புத்தகம் உள் உறுப்புக்களால் ஏற்படக் கூடிய பல்வேறு நோய்களின் கூறுகளை எவ்வாறு கண்டறிந்து சிகிச்சை தருவது என்ற இதில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகம் அர்த்தம் மிகுந்தது. பல நூற்றாண்டுகள் கழித்து மருத்துவமனை மருந்துகள் உருவெடுப்பதற்கு இது உறுதுணையாக இருந்தது. ஹான் மன்னராட்சி காலத்தில் அறுவை சிகிச்சை ஒப்பீட்டளவில் உயரிய இடம் பெற்றது. மூன்று பேரரசர் வரலாறு அல்லது சன் சோ ச்சி என்ற புத்தகத்தில் அறுவை சிகிச்சை செய்வதற்காக பொது மயக்க மருந்து கொடுத்த ஹுவாத்துவோ என்ற மருத்துவர் பற்றி விளக்கப்பட்டுள்ளது.

பின்னர் சோங் வம்சத்தில் கி.மு960-கி.பி,1279வேங் வெய்யி என்பவர் அக்குபங்ச்சன்ரக் கற்பிக்க புதிய முறைகளை பின்பற்றினார். அவர் தனது நுட்பங்களை வரைபடங்கள் மற்றும் மனித உடம்பின் மாதிரிகளைக் கொண்டு விளக்கினார். மிங் வம்சத்தில்கி.மி1368-கி.பி1644டைபாய்டு காய்ச்சல், பருவநிலைமாற்றத்திற்கு ஏற்ப ஏற்படும் தொற்றுநோய், பிளேக் எனப்படும் கொள்ளை நோய் ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை மருத்துவர்கள் காதைக்கத் தொடங்கினர். இதற்காக தணிப்பட்ட புதிய புத்தகம் ஒன்று ச்சிங் வம்சகாலத்தில் எழுதப்பட்டது.

மிங் வம்சகாலத்தில் தான் மேற்கத்திய மருத்துவம் சீனாவில் அறிமுகமானது. அப்போது மருத்துவ அறிவியலில் ஈடுபட்டிருந்தவர்கள் கீழை மருத்துவத்தையும் மேலை மருத்துவத்தையும் இணைக்கத் தொடங்கினர். இந்த முயற்சி தொடர்ந்து இணைக்கும் சீன மருத்துவத்தில் இந்த முன்னேற்றம் பிரதிபலிக்கின்றதுஇதன் அடிப்படையில் சீனரின் மருத்துவத்துறை ரீதியன சாதனை புலனாகிறது.

சீனரின் மிக முக்கிய சாதனைகளில் ஒன்றாக விளங்குவது அவர்களின் கட்டிடக்கலை ஆகும். சீனரின் கட்டிடக்கலை என்னும் போது சீனப்பெருஞ்சுவராகும்.கிமு ஏழாம் நூற்றாண்டுக் காலப்பகுதியிலேயே சீனர்கள் சுவர்க் கட்டுமான நுட்பங்கள் பற்றி அறிந்திருந்தனர். இச் சுவர் குறுகிய காலமே நிலைத்திருந்த கின் வம்சத்தின் முக்கியமானவரான முதலாவது பேரரசர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. இந்தச் சுவர் ஒரே தனி முயற்சியின் கீழ் கட்டப்படவில்லை. கிமு ஐந்தாம் நூற்றாண்டுக்கும் கிமு 221 க்கும் இடைப்பட்ட காலத்தில், சண்டையிட்டு வந்த சி, யான், சாவோ ஆகிய நாடுகளினால் தங்கள் சொந்தப் பாதுகாப்புக்காகக் கட்டப்பட்ட பல்வேறு தனித்தனியான சுவர்களின் ஒன்றிணைப்பால் பெறப்பட்டது. இச் சுவர்கள் பொதுவாக இறுக்கப்பட மண், சரளைக் கற்கள் என்பவற்றினால் கட்டப்பட்டு, வாள், ஈட்டி போன்ற சிறு ஆயுதங்களையே தாக்குப்பிடிக்கக் கூடியனவாக இருந்தன. கிமு 221 ஆம் ஆண்டில் சின் ஷி ஹுவாங் எதிரி நாடுகள் அனைத்தையும் கைப்பற்றி சீனாவை ஒன்றிணைத்து சிங் வம்ச அரசை நிறுவினார். மையப்படுத்திய ஆட்சியை நடத்துவதற்காகவும், நிலப்பிரபுக்கள் மீண்டும் வலுப்பெறுவதைத் தடுக்கவும், தனது பேரரசுக்கு உட்பட்ட நாடுகளின் இடையில் அமைந்திருந்த எல்லைச் சுவர்களை இடித்துவிட அவர் ஆணையிட்டார். இடையிடையே காணப்பட்ட இடைவெளிகளையும் நிரப்பி வடக்கு எல்லைச் சுவரை முழுமைப்படுத்தினார். பின் வந்த வம்சங்களினால் திருத்தப்பட்டும், விரிவாக்கப்பட்டும் வந்த இச்சுவர், மிங் வம்ச ஆட்சிக் காலத்தில் தற்போதைய வடிவத்தைப் பெற்றது.வெவ்வேறான நான்கு முக்கிய கட்டுமானங்களும், திருத்தவேலைகளும் நடைபெற்றிருக்கின்றன.கிமு 208 (கின் வம்சம்), கிமு முதலாம் நூற்றாண்டு (ஹான் வம்சம்),1138 - 1198 (பத்து வம்சங்களினதும் ஐந்து அரசுகளினதும் காலம்),1368 (மிங் வம்சம்)

மிங் வம்சப் பெருஞ் சுவர், கிழக்கு முனையில் ஹேபெய் மாகாணத்திலுள்ள கிங்ஹுவாங்டாவோ (Qinghuangdao)வில் போஹாய் குடாவுக்கு அருகில் ஷன்ஹாய் கடவையில் தொடங்குகிறது. ஒன்பது மாகாணங்களையும், 100 கவுண்டி'களையும் கடந்து, மேற்கு முனையில், வடமேற்கு கன்சு மாகாணத்திலுள்ள ஜியாயு கடவையில் முடிவடைகின்றது. ஜியாயு கடவை, பட்டுச் சாலை வழியாக வரும் பயணிகளை வரவேற்பதற்காக அமைக்கப்பட்டது. பெருஞ் சுவர், ஜியாயு கடவையில் முடிவடைகின்றபோதும், ஜியாயு கடவையையும் தாண்டி பட்டுச் சாலையில் காவல் கோபுரங்கள் உள்ளன. இக்கோபுரங்கள் படையெடுப்புக்களை அறிவிக்க புகைச் சைகைகளைப் பயன்படுத்தின.

மேலும் ஷி ஹூவாங்டி கி.மு.210-ஆம் ஆண்டில் தனது 49-ஆவது வயதில் இயற்கையாகவே காலமானார். அவர் கல்லைறையைச் சுற்றி மிக வரிசையாக ஆறாயிரம் டெரகோட்டா (Terracotta Army) களிமண் வீரர்களின் சிற்பங்கள் புதைக்கப்பட்டன. மரணத்திற்கு பிறகும் அவருக்கு சேவை புரிய அந்த சிற்பங்கள் உதவும் என்ற நம்பிக்கையில் அவ்வாறு செய்யப்பட்டது. இந்த கல்லறை தற்போது உலகில் புகழ் பெற்ற சின் கல்லறையாகவும் குதிரை மற்றும் படைவீரர் உருவ சிலைகளின் காட்சியாகவும் திகழ்கின்றது. இதுவும் சீனரின் கட்டிடக்கலை ரீதியான சாதனையினை வெளிக்கொணர்கிறது.

இத்தகைய பல்வேறு துறைகளிலும் முன்னேற்றம் கண்டு சீனர் விளங்குவதற்கு சீன அரச வம்சங்கள் முக்கிய இடத்தினை வகிக்கின்றன. எனவே இத்தகைய வாழ்க்கை முறையினை ஏற்படுத்துவதில் அரச வம்சங்களின் பங்கினையும் அரச வம்சங்கள் பற்றிய தகவல்களையும் அறிவது சாலச்சிறந்தது.

சியா அரசமரபு சீன வரலாற்றுப் பதிவுகளின் படி சீனாவை ஆட்சி செய்த முதலாவது அரசமரபு ஆகும். கிமு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் இந்த அரச மரபு ஆட்சிக்கு வந்தது. மரபு வழிச் செய்திகளின் படி இந்த அரசமரபு கிமு 2205 இருந்து 1766 சிறப்புற்று இருந்ததாக கூறப்படுகிறது.17 மன்னர்கள் அடுத்தடுத்து 500 ஆண்டுகளுக்ரு ஆட்சிபுரிந்தனர். அதன் அதிகார எல்லை தற்போதைய சீனாவின் சான்சி மாநிலத்தின் தெற்கு பகுதியிலிருந்து ஹொநான் மாநிலத்தின் மேற்கு பகுதி வரை விரிவடைந்தது.

சியா வம்சத்தை நிறுவியவரான தா யு மன்னர், நீர்வளத்தை கட்டுப் படுத்தி மக்களுக்கு அமைதியான வாழும் சூழ்நிலையை உருவாக்கிய புகழ் பெற்ற வீரராக பாராட்டப்பட்டார். நீண்டகாலமாக வெள்ள பெருக்கு ஏற்பட்ட மஞ்சள் ஆற்றை வெற்றிகரமாக மட்டுப்படுத்திய அவர் பழங்குடி மக்களின் பாராட்டைப் பெற்றார். அவருடைய தலைமையில் சியா வம்சம் தொடங்கியது. பழஞ் சமூகம் தனியார் சொத்துரிமை உடைய சமூகமாக மாறியதை அதன் உருவாக்கம் எடுத்துக்காட்டுகின்றது. அப்போதே அடிமை  சமூகம் சீனாவில் நுழைந்து விட்டது.

சியா வம்சத்தின் முடிவில் மன்னர் குடும்பத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. வர்க்க முரண்பாடு கடுமையாகியது. சிற்றரசுகள் அடுத்தடுத்து முரண்பட்டு குழப்பத்தை செய்தனர். அவர்களில் ஒருவரான ஸான் என்ற சிற்றரசுகள் இந்த குழப்பத்தை நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி கிளர்ச்சியை தூண்டிவிட்டு கடைசியில் சியா சியெயின் படைவீரர்களை தோற்கடித்தார். சியா சியெ தப்பி ஓடிய பின் சியா வம்சகாலம் முடிவடைந்தது.

சியா வம்ச காலம் பற்றிய பதிவேடுகள் மிக குறைவு.  ஆய்வின் படி சியா வம்ச வரலாற்றை மறு உருவாக்கம் செய்வது அவர்களின் விருப்பங்களில் ஒன்றாகும்.ஏலிதொ பண்பாட்டுச் சிதிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்கள் முக்கியமான  பொருட்களாகும். வீட்டின் அடிப்படை தளம், சாம்பல் குழி, சவபெட்டி புதைக்கப்பட்ட குழி ஆகியவற்றின் சுவரில் மரக் கருவிகளின் சாயல் காணப்பட்டது. அப்போது வாழ்ந்த உழைப்பாளிகள் பயன்படுத்திய கருவிகள் மிகவும் எளிதானவை. இருந்தாலும் அவர்கள் அயராது உழைத்து விவேகத்துடன் நீர்வளத்தைக் கட்டுப்படுத்தி வேளாண்மை உற்பத்தியை வளர்த்தார்கள். இதுவரை சியா வம்சச் சிதிலத்தில் பெரிய வெண்கல பொருட்கள் எதுவும் கண்டிபிடிக்கப்பட வில்லை. ஆனால் ஏலிதொ பண்பாட்டு மரபுச் செல்வங்களில் வெண்கலத்தால் உருவாக்கப்பட்ட சுத்தி,  குத்தூசி, உளி முதலிய கருவிகள் உள்ளன. அவற்றின் சிதிலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கண்டுபிடிக்கப்படட் வெண்கல வார்ப்பு அச்சு, வெண்கல கழிவு போன்ற பொருட்கள் சிதிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. தவிரவும் ஏராளமான கை வினை தரம் கொண்ட மணிக்கல் பொருட்கள் கல் இசைக் கருவிகள் தொல்பொருட்களில் காணப்பட்டன. அப்போதைய கைவினை தொழில்துறையின் தொழில் நுட்பமும் மேலும் வளர்ச்சியடைந்ததை இந்த தொல் பொருட்கள் எடுத்துக்காட்டின.

பண்டைகால பதிவேட்டில் சியா வம்ச ஆட்சியில் நேரம் கணக்கிடுவது பற்றிய பதிவேடு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.  பாதுகாக்கப்பட்ட “தாத்தை அற நூலில்”உள்ள சியா வம்சத்தின் நேரம் கணக்குதல் மிக முக்கிய பண்பாட்டு பதிவேடாகும். வட நட்சத்திரக் குழு காட்டிய இடத்தின் படி மாதங்களை உறுதிப்படுத்தும் திறமையை அப்போதைய மக்கள் பெற்றிருந்தனர். இது சீனாவின் மிக முற்கால நாள்காட்டியாகும். சியா வம்சத்தின் நாள் காட்டியின் படி ஆண்டு 12 மாதங்களாக பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு மாதத்தின் நட்சத்திர நிலை, காலநிலை, பொருள் நிலை அப்போது செய்ய வேண்டிய வேளாண் நிலை, அரசியல் நிலை என்பன தனித்தனியாக குறிப்பிடப்பட்டன. அப்போதைய சியா வம்சத்தின் வேளாண்மை உற்பத்தியின் வளர்ச்சி நிலை குறிப்பிடத்தக்க அளவில் பிரதிபலிக்கப்பட்டது. பண்டைக்கால சீனாவில் மதிப்புக்குரிய அறிவியல் அறிவு சியா வம்சத்தால் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.


சாங் அரசமரபு  சீன மரபுவழி வரலாற்றுப் பதிவுகளின் படி சீனாவை ஆண்ட இரண்டாவது அரசமரபு ஆகும். Xia Shang Zhou Chronology Project கருத்தின் படி இந்த அரசமரபு சீனாவை கிமு 1600 - 1046 காலப் பகுதியில் ஆட்சி செய்தது. இந்த வம்சத்தைப் பற்றிய தகவல்கள் பண்டங்களில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்களில் இருந்தும், விலங்கு ஓடுகளில் எழுதப்பட்ட சீன எழுத்துப் படங்களில் இருந்தும் கிடைக்கின்றன. மொழி வரலாற்றில், மிக தொன்மைக் காலத்தில் கிடைத்த எழுத்து ஆதாரங்களில் இக்காலத்தவையும் அடங்கும்.

சௌ வம்சம் சீனாவை அதிக காலம் ஆண்ட வம்சம் (ஆட்சி மரபு) ஆகும். இந்த வம்சம் 1045 கிமு 256 காலப் பகுதியில் சீனாவை ஆண்டது.  இவர்களின் காலப் பகுதியில் இரும்பு சீனாவுக்கு அறிமுகமானது. செப்பு சிற்பவேலை உச்சங்களைக் கண்டது. சீன மொழியின் எழுத்துமுறை விரிவு பெற்றது.

சௌ வம்ச காலத்தில் தான் பிற்காலத்தில் சீனாவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய பல மெய்யியலாளர்கள் வாழ்ந்தார்கள். கன்பூசியசு, லா ஒசி, மோகி, Han Fei, மென்சியசு போன்றோர் இன்றுவரை சீன சிந்தனையின் அடிப்படைகளாக விளங்குகிறார்கள். இவ்வம்ச காலத்திலேயே தான் தாவோயிஷம் என்ற தத்துவக்கோட்பாடு தோன்றி வளர்ந்தது. இது மக்கள் மத்தியில் தோன்றக்கூடிய பிரச்சனைகளை உள்ளடக்கியிருந்தது.ஆயினும் இக்கோட்பாடு பெரும்பாலும் கொன்பூசியசின் கோட்பாட்டிற்கு முரணாக காணப்பட்டது.இவ்வகை தத்துவ ஞானிகள் சீனாவில் முதன் முதலாக இவ்வுலகம் அல்லாத மரு உலகக் கோட்பாடுகளுடன் தமது கருத்துக்களை  வெளியிட்டனர்.


சின் வம்சம் பற்றி நோக்குகையில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலான அடிமை சமூகத்துக்கு பின் ஒன்றிணைந்த மத்திய அதிகாரத்துடந் சீன வரலாற்றின் முதலாவது நிலபிரபுத்துவ வம்சமான சின் வம்சம் உருவாகியது. அதன் தோற்றம் சீன வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.கி.மு.255ம் ஆண்டு முதல் கி.மு.222ம் ஆண்டு வரையான காலம் சீன வரலாற்றில் போரிடும் நாடுகள் காலமாகும். அக்காலத்தில் தான் சீனாவில் அடிமைச் சமூக முறை  முடிவடைந்தது. அப்போது பல சிறிய சுதந்திர நாடுகள் இருந்தன. அவற்றுக்கிடையில் மோதல் ஏற்பட்டு பல அழிந்தன. இறுதியில் 7 பெரிய நாடுகள் மட்டுமே எஞ்சியன. சிங், சி, சூ,, வெய், யென், ஹான், சௌ ஆகிய நாடுகள்7 வீரர்கள் என்று அழைக்கப்பட்டன. இந்த ஏழு நாடுகளில் வட மேற்கில் உள்ள சிங் நாட்டில் ராணுவ மற்றும் வேளாண் மேற்குர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆகவே அதன்  ஆற்றல் மேற்குக்கிரமாக வலிமையடைந்தது. கி.மு.247ம் ஆண்டில் சிங் வம்ச மன்னராக 13 வயதான யின்சன் பதவி ஏற்றார். 22 வயதில் அவர் ஆட்சிபுரிந்த பின் மற்ற ஆறு நாடுகளை அழித்து நாட்டை ஒன்றிணைக்கும் மகத்தான நெடுநோக்கு திட்டத்தை துவக்கினார். திறமைசாலிகளை அவர் தேடினார். எந்த நாட்டவராக இருந்தாலும் அவர் திறமைசாலி என்றால் அவர் பதவியில் நியமிக்கப்பட்டார். எடுத்துக்காட்டாக, “சன் கோ கால்வாயை” கட்டும் அதிகாரத்தை ஹான் நாட்டைச் சேர்ந்த உளவாளி சென் கோசினுக்கு அவர் கொடுத்தார்.
கி.மு.230ம் ஆண்டு முதல் கி.மு.221ம் ஆண்டு வரையான பத்து ஆண்டுகளுக்குள் யின்சன் அடுத்தடுத்து ஹான், சௌ, வெய், யென், சு, சி ஆகிய ஆறு நாடுகளை தோற்கடித்து ஒன்றிணைப்பு இலட்சியத்தை நிறைவேற்றினார். அத்துடன் சீன வரலாற்றில் பிரிவினை நிலைமை முடிவடைந்தது. ஒருங்கிணைக்கப்பட்டு, மத்திய அதிகாரம் சின் மன்னராட்சியின் கீழ் வந்து யின்சன் சீன வரலாற்றில் முதலாவது மன்னராகினார். “ஸ்குவாண்டி” என்று அவர் அழைக்கப்பட்டார். சின் வம்ச அரசர்கள் முதன் முதலில் குவாங்தீ என்ற பட்டப் பெயரை சூடிக்கொண்டனர். பல அரசுகள் ஒடுக்கப்பட்டு ஒன்றுபடுத்தப்பட்டு ஒரு பெரும் பேரரசு என்ற நிலையை அடைந்தன.

சின் நாடு சீனாவை ஒன்றிணைத்து சீன வரலாற்றில் பெரும் பங்கு ஆற்றியது. இந்த வம்ச காலத்தயே பேரரசுக்காலம் என்பர்.இது மிக முக்கியத்துவம் உடையது. முதலில், அரசியலில் ஸ் குவாங் நிலவாரிசு உடைமை முறையை சின் மன்னர் ஒழித்தார். நாட்டை 36 நிர்வாக வட்டாரங்களை பிரித்தார். அதன் கீழ் மாவட்டங்கள் உள்ளன. மத்திய மற்றும் உள்ளூர் அதிகாரிகள் மன்னரால் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டனர். தலைமுறை தலைமுறையாக அதிகாரிகளை நியமிக்கும் முறை ஒழிக்கப்பட்டது. சின் நாடு உருவாக்கிய நிர்வாக வட்டார அமைப்பு முறை சீனாவின் ஈராயிரம் ஆண்டுகால நிலப்பிரபுத்துவ வரலாற்றில் முடிவான அமைப்பு முறையாக செயல்பட்டது. தற்போதைய சீனாவில் உள்ள பல மாவடங்களின் பெயர்கள் அப்போது தான் நிர்ணயிக்கப்பட்டன குறிப்பிடத்தக்கது.
சின் நாடு நாட்டின் அளவீட்டு முறையை ஒருமைப்படுத்தியது. அதற்கு முன் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு அளவீட்டு ஆய்வு முறைகள் இருந்தன. பொருளாதாரத்தின் வளர்ச்சி குறைந்திருந்தது. இதற்கு ஏற்ப நாணயத்தையும் சட்டத்தையும் சின் ஸ் குவான் டி  ஒருக்கிணைத்தார். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கினார். அதேவேளையில் மத்திய அதிகாரம் பெரிதும் வலுப்படுத்தப்பட்டது.

சிந்தனை மேலாதிக்கத்தை வலுப்படுத்தும் வகையில் அரசு தொகுத்து“சின் வரலாறு”நூல் தவிர  மற்ற நாடுகளின் வரலாற்று நூல்களையும் கம்பியூசியஸ் படைப்புகளையும் தீயிட்டுக் கொளுத்துமாறு சின் ஸ் குவான் கி.மு. 213ம் ஆண்டில் கட்டளையிட்டார். இந்த மதிப்புக்குரிய படைப்புகளை தனிப்பட்ட முறையில் மறைமுகமாக சேகரித்து பிரசாரம் செய்தவரை கொன்று விடும்படி அவர் கட்டாயப்படுத்தினார். வடக்கிலுள்ள சிறுபான்மை தேசிய இனஅதிகாரத்தின் ஊடுறுவலை தடுக்கும் வகையில் சின் ஸ் குவான் முந்திய சின், சௌ, யென் நாடுகள் கட்டியமைத்த  பெருஞ் சுவரை பழுதுபார்த்து கட்டும் படி அவர் கட்டளையிட்டார். பெருஞ்சுவர் அபோது முதல் மேற்கில் பாலைவனத்திலிருந்து கிழக்கில் கடலுக்கு செல்லும் நீளமான பெருஞ்சுவராகியது. அவருடைய கல்லறையைக் கட்ட சின் ஸ் குவான் 7 லட்சத்துக்கும் அதிகமான உழைப்பாளர்களை அணிதிரட்டினார். இந்த கல்லறை தற்போது உலகில் புகழ் பெற்ற சின் கல்லறையாகவும் குதிரை மற்றும் படைவீரர் உருவ சிலைகளின் காட்சியாகவும் திகழ்கின்றது.

சின் வம்ச ஆட்சியில் அரசியல் அமைப்பினை அறிமுகம் செய்யப்பட்டது. முன்னர் காணப்பட்ட எழுத்துக்கலையும் மறுசீரமைக்கப்பட்டதுபேரரசு எங்குமே ஒரே சீரான எழுத்தின் உபயோகம் காணப்பட்டது. இற்றை வரை சீனாவில் உபயோகிகப்படும் எழுத்தின் இறுதி வடிவம் வழங்கியவர்கள் இவ்வம்சத்தவராவர். இக் காலப் பகுதியில் தான் எழுத்துக்கலையை பயில பயன்படுத்தப்பட்ட மூங்கில் களி மண் பயன்படுத்தப்பட்டமைக்கு பதிலாக கடதாசி, தூரிகை, மை என்பன இக்காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டன.

இரும்பு வண்டி உபயோகிக்கும் மரபையும் ஆரம்பித்தனர். பேரரசில் வண்டி உபயோகமானது மாகாணங்ககளை ஒன்றிணைக்க மட்டுமன்றி சீரான செய்திப் பரிமாற்றத்திற்கும் உதவியது.மற்றும் அறிவியல் துறை சார் கண்டுபிடிப்புக்கள் ஒரே நேரத்தில் சீன பூராகவும் பரவ இது உதவியது. இக் காலப் பகுதியில் சட்டவாதம் தவிர்த்த பல சீன செவ்வியல் ஆக்கங்கள் அழிக்கப்பட்டன. . பிரபுக்கள் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டது. நிலம் விற்கக் கூடாது என்ற பழைய சட்டம் மாற்றப்பட்டது. நில விற்பனைக்கு அனுமதி அளித்தான். சாலைகள் அமைப்பு, நீர்ப்பாசன வசதிகள் போன்ற பல பணிகள் இவரது காலத்தில் ஏற்படுத்தப்பட்டன. சின்-குவங்க்-டி செருக்கு முகுந்தவராக விளங்கினார். புதிய சிந்தனைகளை அறிமுகம் செய்தார். பழைய நூல்களை எரித்தார். பழைய கருத்துக்கள் யாவும் மாற்றப்பட்டன. கி.பி 210 இல் இவர் இற்ந்த பின்னர் கலகம், உள்ளூர் ஒற்றுமை சீர் குலைவு என்பனவற்றை சாதகமாகப் பயன்படுத்தி கான் மரபினர் சின் மரபினை முடிவுக்கு கொண்டு வந்தனர்.


கான் அரசமரபு (The Han Dynasty) கிமு 206 தொடக்கம் கி.பி. 220 வரை 426 ஆண்டுகள் சீனாவில் நிலவிய ஒரு அரசமரபு ஆகும்.  ஹான் கோ டி மன்னரான லியுப்பான் ஹான் வம்சத்தை உருவாக்கி சான் அன்னை தலைநகராக ஆக்கினார். இது கின் அரசமரபைத் தொடர்ந்தும், மூன்று இராச்சியங்களுக்கு முற்பட்டும் நிலை பெற்றிருந்தது.

லியுப்பான் ஆட்சிபுரிந்த 7 ஆண்டுகளில் மத்திய அதிகாரம் வலுப்படுத்தப்பட்டது. மக்களுக்கு நன்மை தரும் பல அரசியல் கொள்கைகளை வகுத்து தமது ஆட்சியை உறுதிப்படுத்தினார். கி.மு.159ம் ஆண்டில் கோச்சு மரணமடைந்த பின் குவெய் மன்னராக பதவி ஏற்றார். ஆனால் அப்போதைய அதிகாரம் ஹான்கோட்டியின் மனைவியான ராணி லயூச்சின் கையில் சேர்ந்தது. ராணி லயூ 16 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். அவர் சீன வரலாற்றில் மிக அரிதான பெண் ஆட்சியாளர்களில் ஒருவராவார். கி.மு.183ம் ஆண்டு வெண்டி மன்னராக பதவி ஏற்றார். அவரும் அவரின் மகனான சுச்சின் மன்னரும் மக்களுக்கு நன்மை தரும் கொள்கைகளில் உறுதியாக நின்று மக்களின் மீது திணித்த வரியை குறைத்தனர். இதனால் ஹான் பேரரசின் பொருளாதாரம் விறுவிறுப்பாக வளர்ந்தது. வரலாற்று ஆசிரியர்கள் இந்த காலத்தை “வென்சிங் ஆட்சி”காலமாக பாராட்டினர்.இந்த அரச மரபினர் புகழ் பெற்ற லியூ (Liu) என்னும் இனக்குழுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் ஆண்ட காலம் சீன வரலாற்றில் ஒரு பொற்காலமாகக் கருதப்படுகின்றது. சீனாவின் பெரும்பான்மைச் சமூகத்தினர் இன்றும் தம்மை கான் மக்கள் என்றே குறிப்பிட்டுக் கொள்கின்றனர்.

மேற்கு ஹான் வம்சம் சீன வரலாற்றில் ஒப்பிட்டளவில் வலிமைமிக்க பேரரசுகளில் ஒன்றாகும். மக்களுக்கு நன்மை தரும் கொள்கை இடையில் ஆட்சிபுரிந்த மன்னர்கள் பின்பற்றினர். மக்கள் உடைக்கும் உணவுக்கும் கவலைப்படமல் செழுமையாக வாழ்ந்தனர். ஹான் வம்சத்தின் அரசியல் உறுதியடைந்தது. வூதி மன்னர் அமைச்சர் தொங் ச்சொன் சூ முன்வைத்த கொன்பியூசியஸ் தத்துவத்தை மட்டும் பின்பற்றுவதென்ற யோசனையை ஏற்றுக் கொண்டார். அப்போது முதல்கொன்பியூசியஸ் தத்துவம் உருவாயிற்று. இந்த தத்துவம் சீன மன்னர்கள் ஆட்சிபுரிந்த போது கடைபிடித்த நாட்டை நடத்தும் கொள்கையாக விளங்கியது.

அரசியலும் பொருளாதாரமும் உறுதியடைந்ததால் கைவினைத் தொழில், வணிகம், சமூகவியல் கலை இயற்கை அறிவியல் ஆகிய துறைகள் பெரிதும் முன்னேற்றம் அடைந்தன. அறிவியல் தொழில் நுட்பம் உயர்ந்ததுடன், உலோகம், துணி ஆகியவற்றை முக்கியமாக கொண்ட மேற்கு ஹான் கைவினைத் தொழிலின் பயன்பாடு அதிகரித்தது. இதன் வளர்ச்சி மூலம் வணிகத் துறை செழுமையாகியானது. பட்டுத் துணிப் பாதை மூலம் மேற்கு ஆசியாவில் உள்ள பல்வேறு நாடுகளுடன் தூதாண்மை மற்றும் வணிகத் தொடர்புகள் திறக்கப்பட்டன.

கி.பி.25ம் ஆண்டு முதல் கி.பி.220ம் ஆண்டு வரையான காலத்தில் ஹென்குவாங் வூ மன்னர் லியூ சியு கிழக்கு ஹான் மன்னராட்சியை நிறுவினார். கி.பி.25ம் ஆண்டு லியு சியூ லியூலின் எனும் படையின் உதவியுடன் ஆட்சியை கைபற்றிய ஓங் மானைத் தோற்கடித்து மன்னராக பதவி ஏற்றார். ஹான் நாட்டை நிறுவினார். லொயானை தலைநகராக நிர்ணயித்தார். இரண்டாவது ஆண்டில் குவான்யூ மன்னர் லியு சியு ஓங் மான் நடைமுறைபடுத்திய பழைய கொள்கையை மேற்குர்திருத்தி ஆட்சி முறையை சரிபடுத்த கட்டளை பிறப்பித்தார். நாட்டின் விவகாரங்களை கையாள 6 அமைச்சர்களை அவர் நியமித்தார். அதிகாரிகள் அமைமைகளைக் கொண்டிருக்கும் முறைமையை நீக்கினார். நிலத்தை சரிபார்த்தார். இதன் விளைவாக மக்களின் வாழ்க்கை படிபடியாக அமைதியாகியது. கி.பி.முதலாம் நூற்றாண்டின் நடுபகுதியில் குவான் மன்னர், மின் மன்னர், சான் மன்னர் ஆகியோரின் நிர்வாகத்துக்குப் பின், கிழக்கு ஹான் வம்சம் முந்திய ஹான் வம்சத்தின் செழுமையை மீட்டது. அந்த காலம் மக்களால் மறுமலர்ச்சி காலமாக பாராட்டப்பட்டது.

கிழக்கு ஹான் வம்சத்திந் முற்காலத்தில் அரசியல் அதிகாரம் மேலும் வலுபட்டு உள்ளூர் அதிகாரத்துடன் இணைந்ததால் நாட்டின் நிலைமை நிதானமானது. பொருளாதாரம், பண்பாடு, அறிவியல் தொழில் நுட்பம் முதலிய துறைகளின் தரம்மேற்கு ஹான் தரத்தைத் தாண்டியது. கி.பி.105ம் ஆண்டில் சைலன்  தாள் தயாரிப்பு தொழில் நுட்பத்தை கண்டுபிடிக்கவே சீனாவில் மூங்கில் பலகையில் எழுத்துக்கள் செதுக்கப்பட்ட காலம் முடிவடைந்தது. தாள் தயாரிப்பு நுட்பம் சீனாவின் பண்டைர்காலத்திய 4 கண்டுபிடிப்புகளில் ஒன்றாக இப்போது அங்கீகரிக்கப்படுகின்றது. இயற்கை அறிவியல் துறையில் சான் ஹன்னை பிரதிநிதியாகக் கொண்ட கிழக்கு ஹான் கல்வியியல் வட்டாரத்தில் மதிப்பு பெற்றது. வானியல் புவி உருண்டை, பூகோளம் கண்காணிப்பு கருவி போன்ற அறிவியல் கருவிகளை சாங் ஹன் உருவாக்கினார். தவிரவும் கிழக்கு ஹான் வம்சத்தின் பிற்காலத்தில் புகழ் பெற்ற சீன மூலகை மருத்துவர் குவா தோ மயமக்க மருந்து நுட்பத்தை பயன்படுத்தி நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை அளித்தார்.

கான் அரசமரபினர் காலத்தில் சீனா அதிகாரபூர்வமாகக் கன்பூசிய மதத்தை அரச மதமாக ஏற்றுக்கொண்டது. இக்காலத்தில் சீனா, வேளாண்மை, கைப்பணி, வணிகம் ஆகிய துறைகளில் வளர்ச்சி அடைந்திருந்ததுடன், மக்கள்தொகையும் ஐந்தரைக் கோடியைத் தாண்டியிருந்தது. அதே வேளை ஆன் பேரரசு, தனது அரசியல், பண்பாட்டுச் செல்வாக்கைக் கொரியா, மங்கோலியா, வியட்நாம், ஜப்பான், மத்திய ஆசியா முதலிய பகுதிகளையும் உள்ளடக்கி விரிவடைந்திருந்தது. இது பின்னர் உள் நாட்டிலிருந்தும், வெளி நாட்டிலிருந்தும் ஏற்பட்ட அழுத்தங்கள் காரணமாகக் குலைந்து போயிற்று.
கான் அரசமரபை இரண்டு பிரிவுகளாக அடையாளம் காண்பது உண்டு. முதலாவது, முந்திய ஆன் அரசமரபு அல்லது மேற்கத்திய கான் அரசமரபு என்றும், மற்றது பிந்திய ஆன் அரசமரபு அல்லது கிழக்கத்திய ஆன் அரசமரபு என்றும் அழைக்கப்படுகிறது. முந்திய ஆன் அரசமரபு, கி.மு 206 தொடக்கம் கிபி 24 வரையும் சாங்கானில் இருந்து ஆண்டு வந்தது. அடுத்தது, கி.பி 25 ஆம் ஆண்டிலிருந்து கி.பி 220 வரை லுவோயாங்கிலும் இருந்தது. இந்த அரச மரபில் பெண்களும் அரசாட்சி செய்தனர். இவ்வம்ச வெந்தி என்ற மன்னன் வாசிக சாலை ஒன்றை நிறுவினான். கடும் குற்றம் இழத்தோருக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டது. மேற் கூறிய வகையில் சீன நாகரீக அரச வம்ங்கள் சீன மக்களின் உன்னத நிலைக்கு வழி வகுத்தன.

No comments: